கோடைவிடுமுறையையொட்டி திற்பரப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Views - 44 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி. இதனை குமரியின் குற்றாலம் என சுற்றுலா பயணிகள் அழைப்பார்கள். இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் திற்பரப்புக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரள போன்ற வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் குடும்பத்துடன் திற்பரப்புக்கு வருகிறார்கள். தற்போது, வட மாநிலங்களில் இருந்தும், வெளி நாட்டில் இருந்தும் குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருபவர்களும் திற்பரப்பு வரத்தொடங்கி உள்ளனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து, அருவியின் மேல் பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் படகு சவாரி செய்து, சிறுவர் பூங்காவில் விளையாடி குதூகலத்துடன் திரும்புகிறார்கள்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
சமீபத்தில் கடும் வெயிலுக்கு இடையே அவ்வப்போது பெய்த மழையால் தற்போது திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைவாக விழுகிறது. கோடைவிடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பில் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் மோட்டார் சைக்கிள், பஸ், வேன், கார் போன்ற வாகனங்களில் வந்திருந்தனர். திற்பரப்பில் நேற்று குளிர்ச்சியான சூழல் நிலவியது.
ஆனால் அருவியில் தண்ணீர் குறைவாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் அந்த தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.News