நாகர்கோவிலில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் கலெக்டர் தலைமையில் நடந்தது
Views - 33 Likes - 0 Liked
-
நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள லூயி பிரெயிலி கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில் நடந்தது. அவர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் வந்து மதுக்கடையை மூட வேண்டும், மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
அப்போது பேச்சிப்பாறை பகுதியில் உள்ள கோருவக்குழி மலையில் வாழும் காணி இன மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘காணி இனத்தை சேர்ந்த நாங்கள் பாரம்பரியமாக வனப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள சுமார் 25 வீடுகளுக்கு மின் இணைப்பு தர வனத்துறையினர் தடை செய்து வருகிறார்கள். எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தி எங்களது வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.News