கார்ப்பரேஷன் வங்கி லாபம் ரூ.160 கோடி
Views - 71 Likes - 0 Liked
-
பொதுத் துறையைச் சேர்ந்த கார்ப்பரேஷன் வங்கியின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.160 கோடியாக இருந்தது.
இதுகுறித்து அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையி லான நான்காவது காலாண்டில் கார்ப்பரேஷன் வங்கியின் வருவாய் ரூ.5,730.48 கோடியாக இருந்தது.
2015--2016 நிதி ஆண்டின் ஜனவரி--மார்ச் காலாண்டில் ரூ.510.9 கோடி இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், 2016--2017 நிதி ஆண்டின் இதே கால அளவில் வங்கி ரூ.159.98 கோடி லாபம் ஈட்டியது.
வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 9.98 சதவீதத்திலிருந்து அதிகரித்து 11.70 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 6.53 சதவீதத்திலிருந்து உயர்ந்து 8.33 சதவீதமாகவும் காணப் பட்டது.
வாராக் கடன் அளவு அதி கரித்துள்ளபோதிலும் அதற் கான இடர்பாட்டு ஒதுக்கீட்டுத் தொகை ரூ.1,920.20 கோடியி லிருந்து சரிந்து ரூ.948.01 கோடியாக இருந்தது.
சென்ற 2016--2017 முழு நிதி ஆண்டில் வருவாய் ரூ.21,146.39 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.22,561.78 கோடியாக இருந்தது.
அதேசமயம், 2015-20-16 நிதி ஆண்டில் ரூ.506.48 கோடி இழப்பு ஏற்பட்டிருந்த நிலை யில் சென்ற நிதி ஆண்டில் ரூ.561.20 கோடி லாபம் ஈட்டப் பட்டுள்ளதாக கார்ப்பரேஷன் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
News