31000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்
Views - 35 Likes - 0 Liked
-
இந்திய பங்குச்சந்தைகள் நேற்றும் புதிய உச்சத்தை தொட்டன. நிப்டி முதல் முறையாக 9600 புள்ளிகளும், சென்செக்ஸ் முதல் முறையாக 31000 புள்ளிகளையும் கடந்தன.
நேற்றைய வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 31074 புள்ளியை தொட்டது. வர்த்தகத் தின் முடிவில் 278 புள்ளிகள் உயர்ந்து 31028 புள்ளியில் முடி வடைந்தது. வர்த்தகத்தின் இடையே நிப்டி 9604 புள்ளியை தொட்டது. முடிவில் 85 புள்ளிகள் உயர்ந்து 9595 புள்ளியில் முடிவடைந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் நிப்டி 30.46 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதேபோல சென்செக்ஸ் 26 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வது மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவது ஆகிய காரணங்களால் நேற்றைய வர்த்தகம் உயர்ந்தது.
டாடா ஸ்டீல், பவர் கிரிட், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ், மாருதி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் கணிசமான ஏற்றத்தை சந்தித்தன.
மெட்டல், கேபிடல் குட்ஸ், கன்ஸ்யூமர் டியூரபிள் ஆகிய குறியீடுகள் உயர்ந்தன. ஹெல்த் கேர் குறியீடு சரிந்து முடிந்தன. மிட்கேப் குறியீடு 2 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 1.6 சதவீதமும் உயர்ந்து முடிந்தன. ஒட்டுமொத்தமாக 1,821 பங்குகள் உயர்ந்தும் 845 பங்குகள் சரிந்தும் முடிவடைந்தன.
பிஎஸ்இயில் பட்டியலிடப் பட்டுள்ள மொத்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1,25,63,952 கோடியாக இருக்கிறது.
News