தொடக்கப்பள்ளி மாணவ–மாணவிகளுக்கான இலவச பாடப்புத்தகங்கள் நாகர்கோவில் வந்தன
Views - 44 Likes - 0 Liked
-
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு இலவச (விலையில்லா) பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் ஆண்டுதோறும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2017–2018–ம் கல்வி ஆண்டிற்கான பாட புத்தகங்கள் மாவட்டம் வாரியாக வினியோகிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் சுசீந்திரம் சரகங்களில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவ–மாணவிகளுக்கான பாடப்புத்தகங்கள் நேற்று வந்தன.
நாகர்கோவில் சரகத்தில் 88 பள்ளிகளும், சுசீந்திரம் சரகத்தில் 47 பள்ளிகளும் என மொத்தம் 135 பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் 8,427 மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள். இவர்களுக்கு முதல் மற்றும் 2–ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் நேற்று வந்தன.
பள்ளிகளுக்கு அனுப்பும் பணி
இவை மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியிலும், உதவி தொடக்க கல்வி அதிகாரி அலுவலகத்திலும் இறக்கி அடுக்கி வைக்கப்பட்டது. இந்த பணியில் உதவி தொடக்க கல்வி அதிகாரி ஹரிகுமார், கூடுதல் உதவி தொடக்க கல்வி அதிகாரி கலாவதி, நாகர்கோவில் சரக தலைமை ஆசிரியர் கழக இணை செயலாளர் தியாகராஜன் ஆகியோர் ஈடுபட்டனர்.
புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி இன்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புத்தகங்களை பள்ளி திறந்த முதல் நாள் அன்றே மாணவ–மாணவிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.News