வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி ஜூலையில் தொடக்கம் இந்திய தேர்தல் கமிஷன் தகவல்
Views - 37 Likes - 0 Liked
-
தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்குவதற்காக அடுத்த மாதம் ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சிறப்பு பணி நடத்த இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.இந்த சிறப்பு பணி அனைத்து மாநிலங்களிலும் தொடங்கப்படுகிறது. “எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது” என்ற கருப்பொருளை முன்வைத்து இந்திய தேர்தல் கமிஷன் செயல்படுகிறது.விண்ணப்பிக்கலாம்அதன்படி, அதிக அளவில் இளைய வாக்காளர்களை, குறிப்பாக 18-19 வயதுக்கு உள்பட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க, தற்போது நடைபெறும் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த காலத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.ஜூலை 31-ந் தேதி நிறைவடையும் இந்த சிறப்பு பணியின்போது வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம்.தபால் மூலமும் படிவங்களை அனுப்பலாம். www.el-e-ct-i-ons.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். 9.7.17 மற்றும் 23.7.17 ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.சிறப்பு முகாம்கள்சிறப்பு முகாம்கள் நடைபெறும் அந்நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களைப் பெறுவார்கள். இந்த சிறப்பு பணியின்போது, இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணியும் நடைபெறவுள்ளது.இறப்பு பதிவு செய்யப்பட்ட விவரங்கள் உள்ளாட்சி அலுவலங்களில் இருந்து பெறப்பட்டு அதனடிப்படையில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியல்களில் இருந்து நீக்கப்படும். மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.News