தங்கம் மீதான ஜிஎஸ்டி வரி வரும் 3-ம் தேதி அறிவிப்பு: 2 சதவீதத்துக்குள் இருக்கும் என எதிர்பார்ப்பு
Views - 43 Likes - 0 Liked
-
தங்கம் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு எவ்வளவு என்பது குறித்து, வரும் 3-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை (ஜிஎஸ்டி) ஜூலை மாதத்தில் இருந்து அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இது வரையில் தங்கம் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு எவ்வளவு என்பது என முடிவு செய்து அறிவிக்க வில்லை.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
தங்கத்தில் முதலீடு செய்வது தமிழக மக்களின் பாரம்பரியமாக இருக்கிறது. மற்ற பங்குசந்தை, ரியல்எஸ்டேட் போன்ற துறைகளில் பண மதிப்பு நிலையாக இல்லாமல், அடுத்தடுத்து மாற்றங்கள் ஏற்படுவதே இதற்கு காரணமாகும். இதற்கிடையே, தங்கம் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு வரும் 3-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் 2 சதவீதத்துக்குள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். தங்கம் மீதான ஜிஎஸ்டி வரி அதிகமாக இருந்தால் அதிகளவில் பாதிப்பு ஏற்படும். தங்கம் விலை உயரும் அபாயம் ஏற்படும். கடத்தல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
News