ஜூலை 1–ந்தேதி சரக்கு, சேவை வரி அமல் என்னென்ன பொருட்கள் விலை குறையும்?
Views - 38 Likes - 0 Liked
-
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி அடுத்த மாதம் (ஜூலை) 1–ந்தேதி அமலுக்கு வருகிறது.இதன்மூலம் இனி எந்தவொரு பொருளுக்கும் ஒரே விதமான வரியாக சரக்கு, சேவை வரி மட்டுமே விதிக்கப்படும்.இந்த வரிமுறையை அமல்படுத்துவதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைத்து 1,200–க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரிவிதிப்பு விகிதம் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒப்புதல்இந்த வரிவிதிப்பு முறை, 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளை கொண்டதாக அமைந்துள்ளது.அதேநேரத்தில் சாமானிய மக்களும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகிற அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களுக்குமான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு விகிதம் ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.பால், காய்கறி, பழங்கள்ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால் ஜூலை 1–ந்தேதி ஏற்படப்போகிற விலை மாற்றங்கள் பற்றிய ஒரு தொகுப்பு இது:–* பால், காய்கறிகள், பழங்கள், அரிசியில் செய்த பலகாரங்கள், சாதாரண உப்பு, இயற்கை உரம், பிராணிகளுக்கான தீவனம், விறகு, கச்சா பட்டு, கம்பளி, சணல், கைகளால் இயக்கப்படுகிற விவசாய கருவிகள் ஆகியவை ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு பெறுகின்றன. அதாவது, இவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது. எனவே இவை யாவும் விலை குறையும்.* வணிக முத்திரை கொண்ட உணவு தானியங்கள், மாவு வகைகள் ஆகியவற்றுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும்.* சோப்பு, பற்பசை, கூந்தல் தைலங்கள் ஆகியவற்றுக்கு தற்போது 22–24 சதவீத வரி விதிக்கப்படுகிற நிலையில், இவற்றுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கப்படும். எனவே இவற்றின் விலை குறையும்.* வாஷிங் மெஷின் (சலவை எந்திரம்), பிரிட்ஜ் (குளிர்பதனப்பெட்டி), மிக்சி, கிரைண்டர் போன்ற நுகர்வோர் பயன்பாட்டு சாதனங்கள் மீதான வரி 30–32 சதவீதத்தில் இருந்து 28 சதவீத ஜி.எஸ்.டி.யாக குறைக்கப்படுகிறது. எனவே இவை விலை குறையும்.ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பற்றி மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹாஸ்முக் அதியா கூறும்போது, ‘‘மொத்தம் உள்ள 1,200–க்கும் மேற்பட்ட பொருட்களில் 7 சதவீத பொருட்கள் வரி விலக்கு பெற்றுள்ளன. 14 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி விதிப்பின்கீழும், 17 சதவீத பொருட்கள் 12 சதவீத வரிவிதிப்பின்கீழும், 43 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிவிதிப்பின்கீழும், 19 சதவீத பொருட்கள் 28 சதவீத வரி விதிப்பின் கீழும் வரும்’’ என்று குறிப்பிட்டார்.News