நாட்டின் வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய கருத்து!
Views - 38 Likes - 0 Liked
-
நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொய்வடைந்துள்ள நிலையில், அது குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்ற நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி விகிதம் 6.1 சதவிகிதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. அதற்கு முந்தைய காலாண்டில் ஜி.டி.பி விகிதம் 7.9 சதவிகிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் வீழ்ச்சிக்குக் காரணம், கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட 'பணமதிப்பிழப்பு' நடவடிக்கைதான் என்று பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்தது. நாட்டின் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த ஜி.டி.பி வீழ்ச்சி குறித்தும், நாட்டின் வளர்ச்சியில் ஏற்பட்ட தொய்வு குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதையடுத்து ரிசர்வ வங்கி, 'பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் வளர்ச்சி குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. 2017-ன் முதல் நிதியாண்டிலேயே பொருளாதாரத் தேக்கத்துக்கான சில கூறுகள் தென்பட்டன. அது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முந்தைய காலகட்டம்தானே. பணவீக்கமும் அதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.' என்று கருத்து கூறியுள்ளது.
News