முக்காலத்துக்கும் பொருந்தும் திருக்குறள் வேதங்களுக்கு இணையானது-வித்யாசாகர் ராவ்
Views - 46 Likes - 0 Liked
-
சென்னை கவர்னர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை நிறுவவேண்டும் என்று தமிழக (பொறுப்பு) கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார். இதன்படி, கவர்னர் மாளிகை வளாகத்தில் 4 அடி உயரம், 4½ அடி அகலம் கொண்ட திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா நேற்று மாலையில் நடந்தது.
இதில் கவர்னர் வித்யாசாகர் ராவ் கலந்துகொண்டு, திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசியதாவது:
தெய்வப் புலவரும், உலகின் மிகப்பெரிய தத்துவஞானியுமான திருவள்ளுவரின் சிலையை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பண்டைய காலங்களில் புத்தகம் அச்சிடுவதும், அதற்கான காகிதங்களும் இல்லை. ஆனால், வேதங்கள், உபநிடதம், புராணங்கள் எல்லாம் நம் முன்னோர் மனதில் பதிய வைத்து பாதுகாத்துள்ளனர்.
இந்த உலகத்துக்கு, இந்தியாவில் இருந்துதான் அதிக அளவில் புனித நூல்கள் கிடைத்துள்ளது. அதில் செம்மொழியான தமிழில் இருந்து திருக்குறள் உலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. முக்காலத்துக்கும் பொருந்தும் திருக்குறள் வேதங்களுக்கு இணையானது.
இவ்வாறு அவர் பேசினார்.News