உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவில் திருவிழா
Views - 41 Likes - 0 Liked
-
உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழா வருகிற 26–ந் தேதி வரை விழா நடக்கிறது. விழாவின் முதல் நாளில் கும்பாபிஷேகம், கொடியேற்றம், அன்னதானம், அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வருதல் போன்றவை நடந்தன. தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் பணிவிடை, உகப்படிப்பு, அய்யா வாகனத்தில் பவனி வருதல், அன்னதானம் போன்றவை நடைபெறுகிறது.
திருவிழாவின் இறுதி நாளான 26–ந் தேதி காலை 10 மணிக்கு கதகளி, மதியம் 1 மணிக்கு பணிவிடை, தொடர்ந்து தேரோட்டம், இரவு 7 மணிக்கு வாணவேடிக்கை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் பிச்சைப்பழம், ஊர் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.News