கடுமையான வெயிலுக்கு இடையே நாகர்கோவிலில் திடீர் மழை
Views - 47 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியில் இருந்து சாரல் மழை பெய்யத் தொடங்கியது. விட்டு விட்டு பெய்து வந்த இந்த மழை இடையே சில நாட்கள் ஓய்ந்துபோனது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை நாகர்கோவில் நகரில் வழக்கம்போல் வெயில் இருந்தது. காலை சுமார் 11.30 மணி அளவில் திடீரென வானம் இருண்டு, மழை பெய்யத் தொடங்கியது. மிதமாக பெய்த மழை அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. இதேபோல் நாகர்கோவில் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் இந்த மழை இருந்தது.நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் முள்ளங்கினாவிளை பகுதியில் மட்டும் 5 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.News