உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோளை தயாரித்த ஸ்பேஸ்கிட்ஸ் அமைப்பு மாணவர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா
Views - 41 Likes - 0 Liked
-
உலகின் மிகச் சிறிய செயற் கைக்கோளை தயாரித்து விண் ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்கிட்ஸ் அமைப்பை சேர்ந்த மாணவர் களுக்கான பாராட்டு விழா சென் னையில் நேற்று நடைபெற்றது.
64 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய செயற்கைக்கோளை ஸ்பேஸ்கிட்ஸ் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் உருவாக்கியிருந் தனர். 3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளை நாசா அமைப்பு வியாழக்கிழமையன்று விண்ணில் செலுத்தியது.
கார்பன் - ஃபைபர் பொருள் விண்வெளியில் எந்தவிதமான மாற்றங்களை சந்திக்கும் என்று ஆய்வு செய்வதற்காக அனுப்பப் பட்ட இந்த செயற்கைக் கோள், சுமார் 12 நிமிடங்கள் விண்வெளியில் இருந்துவிட்டு மீண்டும் பூமியில் விழுந்தது.
அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்த இந்த செயற்கைக்கோளை நாசா அமைப்பினர் மீட்டு ஆய்வு செய்து வருகின்றனர். 10 நாட் கள் கழித்து ஸ்பேஸ்கிட்ஸ் அமைப் பினரிடம் இந்த செயற்கைக்கோள் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் நாசா மூலம் செயற் கைக்கோளை விண்ணுக்கு அனுப் பிய மாணவர்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் அகில இந்திய சமூக ஆர்வலர் மற்றும் என்ஜிஓ-க் கள் சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஸ்பேஸ்கிட்ஸ் அமைப்பின் இயக்குநரும், செயற்கைகோள் திட்ட இயக்குநருமான மதி கேசன், தலைமை விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக், உயிரியல் விஞ் ஞானி கோபிநாத் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வருமான வரித்துறை இணை ஆணையர் நந்தகுமார், ஜேப்பியார் கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ரெஜினா ஜே முரளி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், சமூக ஆர்வலர்கள் அப்துல் கனி, ஏபிஜே ஷேக் தாவூத், எழுத்தாளர் டி.என். சந்தேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News