‘செல்வ மகள்’ உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி குறைப்பு
Views - 41 Likes - 0 Liked
-
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. இதன்படி, நடப்பு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதத்தை மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இதில், முந்தைய காலாண்டை விட வட்டி 0.1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் (சுகன்யா சம்ரிதி) சேமிப்பு திட்ட வட்டி விகிதம், 8.4 சதவீதத்தில் இருந்து 8.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பொது சேமநலநிதி வட்டி விகிதம், 7.8 சதவீதமாகவும், கிசான் விகாஸ் பத்திர வட்டி 7.5 சதவீதமாகவும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி 8.3 சதவீதமாகவும், 5 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி 7.1 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதை பின்பற்றி, வங்கிகளும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என்று கருதப்படுகிறது.
News