அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு உயர்வு
Views - 40 Likes - 0 Liked
-
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின்மதிப்பு இன்று 9 காசுகள் அதிகரித்து 64.79 காசுகளாக உள்ளது.
இந்தியாவில் ஜிஎஸ்டி அமல் செய்யப்பட்டதற்கு பின்னர் நேற்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு கண்டது. இந்த நிலையில் இன்று இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் அதிகரித்து 64.79 காசுகளாக உள்ளது. இது திங்கள் கிழமை 64.88 காசுகளாக இருந்தது. இதன் மூலம் இன்று ஒரு நாளில் மட்டும், காலை 9.15 மணி நிலவரத்தின்படி, இந்திய ரூபாயின் மதிப்பு 0.14 சதவீதம் அதிகரித்து இருந்தது.
இதேபோன்று 10 ஆண்டுகளுக்கான கடன் பத்திரங்களும் 6.570 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முன்பு 6.564 சதவீதமாக இருந்தது.
மேலும் சென்செக்ஸ் 0.32 சதவீதம் அதாவது 98.61 புள்ளிகள் அதிகரித்து 31,320ஆக உள்ளது. இந்தாண்டில் மட்டும் சென்செக்ஸ் 17.26 சதவீதம் அதிகரித்தும், ரூபாயின் மதிப்பு 4.7 சதவீதம் அதிகரித்தும் காணப்படுகிறது. பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களாக வெளிநாட்டினர் இந்தியாவில் 8.51 பில்லியன் டாலர் மற்றும் 14.62 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளனர்.News