முற்கால சோழர்களின் வம்சாவளி கட்டிய கம்போடிய இந்து கோவில் புராதன சின்னமாக அறிவிப்பு
Views - 51 Likes - 0 Liked
-
கம்போடியா நாட்டின் கம்போங்தோம் மாகாணம் ஈசானபுர நகரில் உள்ள ‘சம்போர் பிரெய் குக்’ என்ற இந்து கோவிலை ‘யுனெஸ்கோ’ அமைப்பு புராதன சின்னமாக அங்கீகரித்து இருக்கிறது. ஈசானபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த ‘சென்லா’ வம்சத்தை சேர்ந்த ஈசான வர்மன் என்ற மன்னர் தனது ஆட்சி காலத்தில்(கி.பி.616–637) இந்த கோவிலை கட்டி உள்ளார்.இந்த வம்சத்தின் கடைசி மன்னர் முதலாம் ஜெயவர்மன் ஆவார். இவர்கள் தமிழகத்தை ஆண்ட முற்கால சோழர்களின் வம்சாவளியினராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.இந்த கோயில் 6 அல்லது 7-ம் நூற்றாண்டை சார்ந்தது என யுனோஸ்கோ அமைப்பு கூறியுள்ளது. இந்த கோயில் 25 சதுர கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது. அதிக வெளிநாட்டினர் வரும் சுற்றுலா தலமாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு வருகை தரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 5 மில்லியனாக அதிகரித்துள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.News