பங்குச்சந்தைகள் : நிப்டி மீண்டும் 9900 புள்ளிகளை கடந்தது
Views - 36 Likes - 0 Liked
-
கடந்தவாரம் இந்திய பங்குச்சந்தைகள் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் இன்று அது தொடரும் என தெரிகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 17-ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 73.69 புள்ளிகள் உயர்ந்து 32,094.44-ஆகவும், நிப்டி 25.60 புள்ளிகள் உயர்ந்து 9,911.95-ஆகவும் வர்த்தகமாகின.
ஜிஎஸ்டி அமலுக்கு வத்த பின்னர் பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பமாவதால் அதன்மீதான எதிர்பார்ப்பு, ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதால் அதன் மீதான எதிர்பார்ப்பாலும், வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததன் எதிரொலியாகவும் பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.News