4 மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில அரசு விருது எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
Views - 49 Likes - 0 Liked
-
தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று கோட்டையில் நடைபெறும் விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணிபுரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், மிக அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், அதிகளவில் கடனுதவி வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சிறப்பாக சேவைபுரிந்த சமூகப்பணியாளர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியதற்காக 2014-ம் ஆண்டுக்கான மாநில விருது அப்போதைய திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலத்துக்கும், 2015-ம் ஆண்டுக்கான மாநில விருது அப்போதைய கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் த.பொ.ராஜேஷ் மற்றும் அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியத்துக்கும், 2016-ம் ஆண்டு மாநில விருது சிவகங்கை மாவட்ட கலெக்டர் எஸ்.மலர்விழிக்கும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகள், அத்தியாவசியப் பொருட் களின் கொள்முதல், இருப்பு மற்றும் நகர்வினை அவ்வப்போது கண்காணிக்கவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அலகு அலுவலர்கள் ஆகிய 51 அலுவலர்களுக்கு ரூ.44 லட்சம் மதிப்பீட்டிலான 51 மடிக்கணினிகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.தமிழகத்தில் சுற்றுச்சூழல் கொள்கையை சீரிய முறையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ‘தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் கொள்கை 2017’ வெளியிட்டார். அதனை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பெற்றுக்கொண்டார்.News