தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்; வானிலை அதிகாரிகள் தகவல்
Views - 58 Likes - 0 Liked
-
ஆந்திராவின் வடக்கு பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. அதன் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இன்று (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களில் மழை பெய்யும். நேற்று காலை 8–30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வருமாறு:–
சின்னக்கல்லாறு 5 செ.மீ., வால்பாறை 4 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், டி.ஜி.பி. அலுவலகம், நடுவட்டம் தலா 3 செ.மீ., ஆலங்காயம், போச்சம்பள்ளி, தளி, வாணியம்பாடி தலா 2 செ.மீ., எண்ணூர், போளூர், உத்தமபாளையம், வானூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
News