வங்கிகள் பட்டியலில் எஸ்பிஐ முதலிடம்
Views - 36 Likes - 0 Liked
-
கடனைத் திருப்பி செலுத்தும் திறன் இருந்தும் கடனைச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது போன்ற கடன் பிரிவில் எஸ்பிஐ வங்கிக்கு அதிக தொகை வர வேண்டி இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் உள்ள இதுபோன்ற (வில்புல் டிபால்டர்) கடனில் 27% ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவைச் சேர்ந்தது. 1,762 கடன் கணக்குகள் மூலமாக ரூ.25,104 கோடி எஸ்பிஐக்கு வர வேண்டி இருக்கிறது. இது கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரமாகும்.
எஸ்பிஐ-யை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி இருக்கிறது. இந்த வங்கிக்கு 1,120 கடன் கணக்குகள் மூலமாக ரூ.12,278 கோடி வர வேண்டி இருக்கிறது. வில்புல் டிபால்டர் பிரிவில் இந்த இரு வங்கிகளிடம் மட்டுமே 40 சதவீத வாராக் கடனை வைத்திருக்கின்றன. இந்த இரு வங்கிகளுக்கு மொத் தம் ரூ.37,382 கோடி வர வேண்டி இருக்கிறது. நிதி அமைச்சகத்தின் கணக்குப்படி கடந்த மார்ச் மாதம் முடிவில் வில்புல் டிபால்டர்கள் செலுத்த வேண் டிய மொத்த கடன் தொகை ரூ.92,376 கோடி ஆகும். முந் தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது 20.4% வாராக்கடன் பிரிவு உயர்ந்திருக்கிறது. கடனைச் செலுத்த வேண்டிய நபர்களின் எண்ணிக்கை 10% மட்டுமே உயர்ந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் முடிவில் 10% உயர்ந்து 8,915ஆக வில்புல் டிபால்டர்களின் எண்ணிக்கை இருக்கிறது. இதில் 1,194 வாராக்கடன் கணக்குகள் மீது வங்கிகள் எப்ஐஆர் பதிவு செய்திருக்கின்றன. மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் தகவல்களை வெளியிட ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தி ருக்கிறது.
News