கன்னியாகுமரியில் 5–வது நாளாக கடல் சீற்றம் படகு போக்குவரத்து ரத்தானதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Views - 54 Likes - 0 Liked
-
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள். அவர்கள் கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து ரசிப்பது வழக்கம். அதே போல் நேற்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்திருந்தனர்.
கன்னியாகுமரி கடலில் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. 5–வது நாளான நேற்றும் கடல் சீற்றம் தொடர்ந்தது. இதனால் முக்கடல் சங்கமம் பகுதியில் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து வந்து கரையில் மோதின.
ரத்து
இந்தநிலையில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்காக படகுத்துறைக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் காலையிலேயே வந்து வரிசையில் காத்து இருந்தனர். கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் தணிந்த பிறகு படகு போக்குவரத்து நடைபெற்றது. அதே போல் படகு போக்குவரத்தை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் கடல் சீற்றம் தொடர்ந்து அதிகமானதே தவிர, குறையவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று நாள் முழுவதும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.News