வன்முறையை ஒருபொழுதும் சகித்து கொள்ள முடியாது; பிரதமர் மோடி வானொலி உரை
Views - 60 Likes - 0 Liked
-
பிரதமர் மோடி வானொலியில் மன்கிபாத் என்ற நிகழ்ச்சி வழியே பொதுமக்களிடம் பேசும் வழக்கத்தினை கொண்டுள்ளார்.
அதன்படி அவர் இன்று பேசும்பொழுது, இறை நம்பிக்கையின் பெயரால் சட்டம், ஒழுங்கை எவரும் தன் கையில் எடுப்பதை ஏற்க இயலாது. குற்றவாளிகள் தப்பிக்க முடியாது.
சமூகம், அரசியல், தனிநபர் அல்லது கலாசாரம் ஆகியவற்றின் மீதுள்ள நம்பிக்கையின் பெயரிலான வன்முறையை சகித்து கொள்ள முடியாது. விநாயகர் சதுர்த்தி போன்ற திருவிழாக்கள் சுற்று சூழலை கருத்தில் கொண்டு கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
குஜராத்தின் தனேரா நகரில் உள்ள வெள்ளம் பாதித்த 22 கோயில்கள் மற்றும் 3 மசூதிகளை ஜமியாத் உலெமா இ ஹிந்த் தன்னார்வ தொண்டர்கள் சுத்தம் செய்துள்ளனர்.
கணினிகளில் விளையாட்டுகளை விளையாடுங்கள். ஆனால் முதலில் வெளியே சென்று விளையாடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.News