சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாநில அரசு விதிகளின்படி கல்வி கட்டணம்
Views - 51 Likes - 0 Liked
-
குஜராத்தில் சி.பி.எஸ்.இ.யுடன் இணைந்த பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை ஒழுங்குபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சார்பில் மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஆனால் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கல்வி கட்டணம் மாநில அரசு விதிகளின்படியே இருக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ. தலைவர் ஆர்.கே.சதுர்வேதி கூறியுள்ளார்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நடத்தப்படும் பள்ளிகள் சார்ந்த தேர்வை ரத்துசெய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று குஜராத்தில் நடந்தது.
இதில் பங்கேற்ற ஆர்.கே.சதுர்வேதி பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் அளிக்கப்படும் வசதிகளின் அடிப்படையிலேயே கல்விக்கட்டணம் அமைய வேண்டும் என எங்கள் சட்டம் சொல்கிறது. அந்தவகையில் குறிப்பிட்ட மாநில அரசு விதிகளின்படியே சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கல்விக்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். இதுகுறித்த அறிவிப்பை மக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும்’ என்று கூறினார்.
News