தென் கொரியாவிலிருந்து தங்க இறக்குமதியை குறைப்பதற்கு மத்திய அரசு திட்டம்
Views - 31 Likes - 0 Liked
-
தென் கொரியாவிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியை குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. தற்போது செய்யப்பட்ட வரி சீர்திருத்தத்தை வர்த்தகர்கள் தங்கள் லாபத்துக்காக பயன்படுத்திக் கொள்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீனாவை அடுத்து இந்தியா அதிக தங்கத்தை பயன்படுத்தி வருகிறது. அதனால் தங்கத்தின் தேவையை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து வருகிறோம். தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.ஆனால் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளுக்கு பொருந்தாது. இதில் தென்கொரியாவும் உள்ளது. முன்னதாக இறக்குமதி வரி இல்லாத நாடுகளுக்கு மத்திய அரசு 12.5 சதவீதம் கலால் வரி விதித்து வந்தது. ஆனால் அனைத்து மறைமுக வரிகளும் நீக்கப்பட்டு ஜூலை 1-ம் தேதி முதல் புதியதாக சரக்கு மற்றும் சேவை அமல்படுத்தப்பட்டதால் வேறு வரிகள் விதிக்கப்படவில்லை. இதனை தெரிந்து கொண்டு வர்த்தகர்கள் தென் கொரியாவிலிருந்து எந்தவித வரியும் இல்லாமல் தங்க இறக்குமதி செய்ததாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தென்கொரியாவிலிருந்து தங்கம் இறக்குமதியை குறைக்க இருப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் எப்படி குறைப்பது என்பது குறித்து அரசின் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
News