விமான டிக்கெட் முன்பதிவுக்கு ஏதேனும் ஒரு ஆவணம் கட்டாயம்
Views - 44 Likes - 0 Liked
-
விமானப் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார், பான் அட்டை போன்ற முக்கிய ஆவணம் அவசியம் என்ற விதிமுறை குறித்து மத்திய அரசு நாளை அறிவிக்க உள்ளது.
விமான டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் எண் அல்லது பான் எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அவசியம் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. ஒருவரை குறிப்பிட்ட விமான நிறுவனம் “நான் ஃபிளையர்ஸ் லிஸ்ட்” எனப்படும் கருப்புப் பட்டியலில் சேர்த்திருந்தால் அவர் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார். இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவுகளை விமானப் போக்குவரத்து அமைச்சகம் நாளை அறிவிக்க உள்ளது.
News