வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 101 புள்ளிகள் உயர்வு
Views - 50 Likes - 0 Liked
-
வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 101 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் 0.77 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100.96 புள்ளிகள் உயர்ந்து 31,763.70 புள்ளிகளாக உள்ளது. நுகர்வோர் சாதனங்கள், மூலதன பொருட்கள், உலோகம், மற்றும் சுகாதாரம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.91% வரை அதிகரித்து காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 31.70 புள்ளிகள் அதிகரித்து 9,961.60 புள்ளிகளாக உள்ளது.
எல் அண்ட் டி, டாட்டா ஸ்டீல், கோல் இந்தியா, சிபலா, ஹெச்டிஎப்சி வங்கி, ஐடிசி லிமிடெட், ஹின் யுனிலீவர், ஹெச்டிஎப்சி லிமிடெட், ஹீரோ மோட்டோ கார்ப், ஓஎன்ஜிசி, லூபின், டிசிஎஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவன பங்குகள் விலை 1.28% வரை உயர்ந்திருந்தது.
ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.38% சரிந்துள்ளபோது சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.38% மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் 0.59% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.10% வரை சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.News