" “May you live all the days of your life.” – Jonathan Swift."

139-வது பிறந்தநாள் பெரியார் உருவப்படத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை

Views - 54     Likes - 0     Liked


  • தந்தை பெரியாரின் 139-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியாரின் சிலை அருகில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
     
    தமிழக அரசு சார்பில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பாண்டியராஜன், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.விஜயகுமார், டாக்டர் ஜெ.ஜெயவர்தன், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் பெரியாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்.பி. பி.எச்.மனோஜ் பாண்டியன் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
     
    டி.டி.வி.தினகரன்-ஜெ.தீபா
     
    இதே போன்று அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது ஆதரவாளர் நவநீதகிருஷ்ணன் எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பெரியாரின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
     
    மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளருமான ஜெ.தீபா தனது கணவர் மாதவன் மற்றும் ஆதரவாளர்களுடன் வருகை தந்து பெரியாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
     
    முழுக்க முழுக்க நாடகம்
     
    அப்போது ஜெ.தீபா நிருபர்களிடம் கூறியதாவது:-
     
    ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியது எல்லாம் முழுக்க முழுக்க நாடகம். பதவிக்காக என்ன வேண்டுமானாலும் அவர் செய்வார். 
    அரசியலுக்கு அப்பாற்பட்டு நாங்கள் விசாரணை நடத்த சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம். மேலும் அவர்கள் நடத்தும் விசாரணையிலும் என்னை சேர்க்க வேண்டும் என சட்டப்பூர்வமாக வலியுறுத்துவோம்.
    எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், அதிகாரம் இல்லாமலே பொதுக்குழுவை கூட்டி இருக்கிறார். 95 சதவீதம் பேர் வந்தனர் என்று கூறுவது எல்லாம் பொய் செய்தி.
     
    நினைவிடமாக அறிவிக்க முடியாது
     
    தமிழகத்தில் பா.ஜனதாவை அனுமதிக்க முடியாது. அ.தி.மு.க. சுதந்திரமாக இயங்க வேண்டும். முதலில் ஒரு குடும்பத்தின் கீழ் செயல்பட்டது. இப்போது பா.ஜனதாவின் கீழ் செயல்படுகிறது. எனவே கட்சியை வலுப்படுத்தி, வலிமையாக வழிநடத்தி செல்பவரிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும்.
     
    ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்க முடியாது. அறிவிக்கவும் விடமாட்டேன். அது எனது பாட்டியின் வீடு, நான் பிறந்து வளர்ந்த வீடு. அதில் சட்ட ரீதியாக சிக்கல்கள் இருக்கிறது.
     
    இவ்வாறு அவர் கூறினார்.
    News