இந்தியாவுக்கு போர் விமானங்கள் தயாரிக்க அமெரிக்க நிறுவனங்கள் விரும்பம்
Views - 49 Likes - 0 Liked
-
இந்தியாவுக்கு தேவையான போர் விமானங்கள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் தொழில்நுட்ப கட்டுப்பாட்டை தங்கள் வசமே வைத்திருக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இந்தியாவுக்கு தேவையான போர் விமானங்களை வழங்க அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்கள் முன் வந்துள்ளன. லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் மேக்-இன்-இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்கவும் முன்வந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க-இந்தியா வர்த்தக குழுமம் விமான தொழில்நுட்ப கட்டுப்பாட்டு உரிமையை அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வசமே வைத்திருக்க சம்மதித்து உறுதி அளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து கருத்து தெரிவிக்காத நிலையில் இந்த விஷயத்தில் பொதுவான சம்மதம் தெரிவிக்க முடியாது என்றும் ஒவ்வொரு தயாரிப்பிற்கும் ஒப்பந்தம் வித்தியாசப்படும் என்றும் கூறப்படுகிறது.News