பாகிஸ்தானை டெரரிஸ்தான் என அழைக்கலாம்: ஐநா கூட்டத்தில் இந்தியா பதிலடி
Views - 29 Likes - 0 Liked
-
பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கான முழு தளமாக இருப்பதாகவும் இனி அந்த நாட்டை டெரரிஸ்தான் என அழைக்கலாம் என்று ஐநா கூட்டத்தில் இந்தியா கடுமையான விமர்சனத்தை முன் வைத்தது.ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸி, பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாதத்தை இந்தியா தூண்டி வருவதாக பேசினார். பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு பதிலளித்த ஐநாவுக்கான இந்திய தூதர் ஈனம் கம்பீர் கூறியதாவது:- “சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை உற்பத்தி, இறக்குமதி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் உள்ளது. எல்லை தாண்டும் பயங்கரவாதத்தால் இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக எப்போதும் இருக்கும் என்பதை பாகிஸ்தான் உணரவேண்டும். பாகிஸ்தான் நாட்டை இனி டெரரிஸ்தான் என அழைக்கலாம்.பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலா வருகின்றனர். ஆனால், இந்தியாவில் மனித உரிமைகள் பற்றி அந்நாடு பேசுகிறது. உள்நாட்டில் தோல்வியடைந்த நாட்டிடமிருந்து ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்த பாடம், உலகத்திற்கு தேவையில்லை. உலகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை கைவிட பாகிஸ்தானுக்கு இன்னும் அறிவுரைகள் தேவைப்படுகிறது. தற்போது, பயங்கரவாதத்திற்கான விலையை பாகிஸ்தான் கொடுத்து வருகிறது” இவ்வாறு அவர் பேசினார்.News