" If you can dream it, you can do it."

நவோதயா பள்ளிகள் தமிழகத்துக்கு வேண்டாம் என்று சொன்னால் தனியார் பள்ளி அரசு நடத்த வேண்டும்

Views - 68     Likes - 0     Liked


 • நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

  கேள்வி:– 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து?...

  பதில்:– வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள போது கருத்து சொல்வது முறையாகாது.

  கேள்வி:– ஜி.எஸ்.டி. வரி காரணமாக பல ஓட்டல்களில் உணவு விலை அதிகப்படியாக உயர்த்தப்பட்டுள்ளதே?.

  பதில்:– ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு தங்களின் ஓட்டலுக்கு பொருந்துமா? பொருந்தாதா? என்ற அச்சத்தின் காரணமாக சிலர் ஓட்டல்களில் அதிகப்படியான விலைஉயர்வு செய்திருக்கலாம். அவர்கள், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை சரியான முறையில் புரிந்துகொண்டபின் தங்களின் ஓட்டலில் விதிக்கப்பட்ட விலை உயர்வை திரும்பப்பெற்று வருகிறார்கள். பாமர மக்களை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்த மத்திய அரசு தயாரில்லை. ஆனால், வரி செலுத்த தகுதி படைத்த மக்கள், வரிசெலுத்தாமல் விட்டுவிடுவதற்கும் அரசு தயாரில்லை. எனவே, இதில் பாமர மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.

  அருகதை இல்லை

  கேள்வி:– நவோதயா பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக தமிழக அரசுக்கு தெரிவிப்பது என்ன?

  பதில்:– நவோதயா பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசுக்கு, நீதிமன்றம் அறிவுறுத்திருப்பது மனமார்ந்த பாராட்டுக்குரியது. தமிழக அரசு அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு நவோதயா பள்ளிகள் திறப்பதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும். மத்திய மந்திரி ஸ்மிருதிராணி, புதிதாக 62 நவோதயா பள்ளிகள் ஆரம்பிக்கப்படும் என கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். அதில் தமிழகத்தில், அதிக பட்சமாக 10 நவோதயா பள்ளிகளை ஆரம்பிக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தேன். இதுதொடர்பாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும் கடிதம் கொடுத்துள்ளேன்.

  வசதி இல்லாத குழந்தைகள் நல்ல கல்வியை பெற வேண்டும் என்பதற்காகவே நவோதயா பள்ளிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இந்தி திணிப்பு எனக்கூறி நவோதயா பள்ளிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமர குழந்தைகளின் கல்வியை கெடுக்க வேண்டாம். தமிழகத்தில் தனியார் பள்ளிகளை தொடங்க அனுமதி அளித்த தி.மு.க. கூட்டணி ஆட்சி, அந்தபள்ளிகளில் இந்தி கற்றுக்கொடுப்பதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?.

  ஆனால் நவோதயா பள்ளிகளில் உணவு, உறைவிடம், கல்வி என அனைத்தும் இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. எனவே, போராட்டம் மூலம் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என சொல்வதற்கு யாருக்கும் அருகதை கிடையாது. ஒருவேளை, நவோதயா பள்ளிகள் தமிழகத்துக்கு வேண்டாம் என்று சொன்னால், தனியார் பள்ளிகளை அரசு எடுத்து நடத்தவேண்டும் அல்லது மூடவேண்டும்.

  பின்வாசல் வழியாக...

  தமிழகத்தில், தற்போது நிலவி வரும் சூழலை பயன்படுத்தி தி.மு.க. பின்வாசல் வழியாக சட்டமன்றத்துக்குள் நுழைய முயற்சிக்கிறது. அதற்காக தந்திரமாக சில வேலைகளைசெய்கிறது. தமிழகத்தில் கழக ஆட்சிகள் ஒழிக்கப்படவேண்டும். அதை நோக்கியே தற்போது தமிழகம் பயணிக்கிறது.

  கேள்வி:– இனயம் வர்த்தக துறைமுக பணிகள் குறித்து...?

  பதில்:– இனயம் வர்த்தக துறைமுக செயல்பாட்டை பொறுத்தவரையில் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் மத்திய அரசின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் இருக்கும்.

  இவ்வாறு கூறினார்.

  முன்னாள் எம்.எல்.ஏ.

  முன்னதாக, பா.ம.க. முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளரும், திருத்தணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரவிராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம், பா.ஜனதாவில் இணைய கடிதம் கொடுத்தார். அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–

  தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் பா.ஜனதாவில் தங்களை இணைத்து வருகின்றனர். குறிப்பாக வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக இணைந்து வருகின்றனர். அதிலும், வன்னிய சமுதாய மக்களுக்காக உழைத்தவர்கள் பலர் பா.ஜனதாவில் இணைந்து வருகிறார்கள்.

  அந்தவரிசையில், திருத்தணி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜனும், தன்னை பா.ஜனதாவில் இணைத்துக்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். அவரோடு சேர்ந்து பல தலைவர்களும் பா.ஜனதாவில் இணையும் நிகழ்ச்சி விரைவில் நடக்கும்.

  இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

  பேட்டியின்போது, மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் தர்மலிங்க உடையார், வேல்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

  News