மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி மரியாதை
Views - 50 Likes - 0 Liked
-
‘தேசத்தந்தை’ என அன்போடு அழைக்கப்படும் மகாத்மா காந்தி 1869–ம் ஆண்டு அக்டோபர் 2–ந்தேதி பிறந்தார். அவரது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் அவரது நினைவிடம் அமைந்திருக்கும் ராஜ்காட்டில் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
அதன்படி காலையில் ராஜ்காட் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போன்ற தலைவர்களும் காந்தியடிகளின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் ஏராளமான பள்ளி மாணவ–மாணவிகளும் தேசத்தந்தைக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னதாக ராஜ்காட்டில் நிறுவப்பட்டு இருந்த காந்தியடிகளின் 1.80 மீட்டர் உயரமுள்ள வெண்கல சிலையை வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டு உள்ள செயல்விளக்க மையம் ஒன்றையும் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார். காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி ராஜ்காட்டில் அனைத்து மத பிரார்த்தனையும் நடந்தது.
இதைப்போல நாட்டின் 2–வது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்ததினமும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் அவரது நினைவிடம் அமைந்துள்ள விஜய்காட்டில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் முன்னாள் பிரதமருக்கு மரியாதை செலுத்தினர்.
News