அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: மத்திய அரசு
Views - 37 Likes - 0 Liked
-
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ள நிலையில், மேலும் சில துறைகளில் ஆதாரை கட்டாயமாக்கும் நடைமுறைகளைத் தொடங்கி உள்ளது. வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் செய்யப்பட்ட நிலையில், தபால் நிலையங்களில் சேமிப்பு திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘‘தபால் நிலையம், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா மற்றும் பப்ளிக் பிரோவிடண்ட் ஃபண்ட போன்றவற்றில் சேமிப்பு கணக்கை தொடங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பம் செய்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளது.மேலும், ஏற்கனவே, தபால் நிலையங்களில் டெபாசிட் செய்து வருபவர்கள் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.News