நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
Views - 36 Likes - 0 Liked
-
நாட்டின் முதலாவது உள்துறை மந்திரி என்ற பெருமையை பெற்ற அவரது பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முதல்–மந்திரிகள் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் ‘‘ சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை நாட்டின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் பாதுகாப்பு மிகுந்த நாளாக கொண்டாட வேண்டும்’’ என கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்றைய தினம் டெல்லியில், வல்லபாய் பட்டேல் படத்துக்கு மரியாதை செலுத்தும் பிரதமர் நரேந்திர மோடி ஒற்றுமைக்கான ஓட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கலாசார அமைச்சகம் உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் நாடு முழுவதும் பட்டேலின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ரெயில்வே அமைச்சகம் 100 ரெயில் நிலையங்களில் பட்டேல் தொடர்பான செய்திகளை வெளியிட உள்ளது.
மேலும், டெல்லி தேசிய ஸ்டேடியத்தில் விளையாட்டு பிரபலங்கள் பி.வி.சிந்து, மிதாலி ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்கும் 1½ கி.மீ தொடர் ஓட்டம் நடைபெற இருக்கிறது.
News