ஐந்து நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை ; வெள்ள பாதிப்பு அவசர உதவி எண்கள்
Views - 46 Likes - 0 Liked
-
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதனால் நேற்றிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனையடுத்து சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இன்னும் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனையடுத்து மழை பாதிப்பு குறித்து தகவல் அளிக்க அவசர உதவி எண்களை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
1913 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 044-25367823, 044-25384965 என்ற எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். 044 - 27237107, 044 - 27237207 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 என்ற எண்ணில் 24 மணி நேரமும், 044 - 27664177 , 044 - 27666746 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.News