எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி 8.30%
Views - 33 Likes - 0 Liked
-
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் வட்டி விகிதம் 0.05 சதவீதம் குறைக்கப்பட்டு 8.30 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இந்த துறையிலே மிக குறைவான வீட்டுக்கடன் வட்டியை எஸ்பிஐ வசூலிக்கிறது. அதேபோல வாகன கடனுக்கான வட்டியும் குறைக்கப்பட்டிருக்கிறது. தற்போது வாகன கடனுக்கான வட்டி 8.70 சதவீதமாக இருக்கிறது. முக்கிய வங்கியான எஸ்பிஐ வட்டி குறைப்பு நடவடிக்கையை அறிவித்திருப்பதால் மற்ற வங்கிகளும் இதனை பின்பற்றும் என்னும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வரும் என எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்சிஎல்ஆர் விகிதத்தை எஸ்பிஐ குறைத்தது. சமீபத்திய வட்டி குறைப்பு மூலமாக எங்களுடைய பெரும்பாலான சிறு கடன்களுக்கு குறைந்த வட்டி விகிதமே வசூலிக்கிறோம். மேலும் குறைவான வட்டி, எங்களுடைய நெட்வொர்க், டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என எஸ்பிஐ ரீடெய்ல் பேங்கிங் பிரிவு நிர்வாக இயக்குநர் பி.கே. குப்தா தெரிவித்திருக்கிறார்.
30 லட்ச ரூபாய் வரைக்குமான கடனுக்கு 8.30 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த குறைவான வட்டியை தவிர தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் திட்டத்தின் கீழ் 2.67 லட்ச ரூபாய் வட்டி மானியமும் பெற்றுக்கொள்ள முடியும்.
கார் கடனை பொறுத்தவரையில் 8.70 சதவீதம் முதல் 9.20 சதவீதம் வரை வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 8.75% முதல் 9.25 சதவீதம் வரை வட்டி இருந்தது. வட்டி விகிதம் வாடிக்கையாளரின் சிபில் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து வழங்கப்படும்.
News