அனுமதி பெறாமல் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தொலைதூர கல்வி திட்டத்தை செயல்படுத்த தடை
Views - 32 Likes - 0 Liked
-
நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் தொலைதூர கல்வித்திட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
நாட்டில் இயங்கி வரும் அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் சம்பந்தப்பட்ட ஒழுங்காற்று ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்றே 2018–19–ம் ஆண்டுக்கான தொலை தூர கல்வித் திட்டத்தை தொடரவேண்டும். இல்லையெனில் அவை தடை செய்யப்படும். இந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கல்வி மையங்களை முழுமையாக உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அதன்பிறகே அனுமதி வழங்க வேண்டும்.
ஜே.ஆர்.என். ராஜஸ்தான் வித்யாபீட், இன்ஸ்டிடியூட் ஆப் அன்வான்ஸ்ட் ஸ்டீஸ் இன் எஜூகேசன் (ராஜஸ்தான்), அலகாபாத் அக்ரிகல்சுரல் இன்ஸ்டிடியூட், விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேசன்(தமிழ்நாடு) ஆகிய நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் 2001 முதல் 2005 வரை படித்து பட்டம் பெற்ற மாணவர்களின் பட்டம் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
மேலும் இந்த 4 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட ஒப்புதல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
News