ரெயில்வே ஊழியர்களுக்கு ‘ஆதார் வருகை பதிவு முறை’
Views - 31 Likes - 0 Liked
-
ரெயில்வே துறையில் ஆதார் அடிப்படையிலான வருகை பதிவு முறை (கைரேகை பதிவு அல்லது கண் கருவிழிப்படல பதிவு முறை) அமலுக்கு கொண்டு வரப்படுகிறது.
இது தொடர்பான அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் ரெயில்வே வாரியம் கடிதம் எழுதி உள்ளது.
இதன்படி முதல்கட்டமாக அனைத்து ரெயில்வே டிவிசன் அலுவலகங்கள், மெட்ரோ ரெயில் கொல்கத்தா, ரெயில்வே பணிமனை, ரெயில் பெட்டி தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் இந்த மாதம் 30–ந் தேதிக்குள் ஆதார் அடிப்படையிலான வருகை பதிவு முறை நடைமுறைக்கு வருகிறது.
அதைத் தொடர்ந்து அனைத்து ரெயில்வே மண்டலங்களிலும், அலுவலகங்களிலும் வரும் ஜனவரி 31–ந் தேதிக்குள் இந்த வருகை பதிவு முறை அமலுக்கு வந்து விடும்.
News