13.28 கோடி பான் எண் ஆதாருடன் இணைப்பு
Views - 35 Likes - 0 Liked
-
ஆதார் எண்ணுடன் 13.28 கோடி பான் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அறிவித்தது. ஜூலை 1ம் தேதி முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் ஆதார் எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டது. இதன்படி இதுவரை 13.28 கோடிக்கும் மேற்பட்ட பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வருமான வரிச்சட்டத்தில் ஆதாரை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கி மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை செயல்படுத்துவதில் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஆதார் எண் அல்லது ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான எண் இல்லாதவர்களுக்கு மட்டுமே என மத்திய நேரடி வரிகள் ஆணையம் விளக்கம் அளித்தது. இந்நிலையில் ஆதார் - பான் இணைப்பு உயர்ந்துள்ளதை மத்திய நேரடி வரிகள் ஆணைய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.News