இந்திய கப்பல் கழக சரக்கு கப்பல் மூழ்கியது; 16 பேர் மீட்பு
Views - 33 Likes - 0 Liked
-
இந்திய கப்பல் கழகத்தின் ரத்னா என்ற கப்பல் நேற்றிரவு 7.30 மணியளவில் மும்பை கடலோரம் மூழ்கியது. இதனை தொடர்ந்து அந்த கப்பலில் பயணம் செய்த அனைத்து 16 பேரும் மீட்கப்பட்டு விட்டனர்.
அவர்களை அருகில் சென்று கொண்டிருந்த மற்றொரு கப்பலில் இருந்தவர்கள் மீட்டுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் மும்பைக்கு செல்கின்றனர். ரத்னா கப்பலானது ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.கப்பல் மூழ்கியது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எனினும், இயந்திர அறைக்குள் நீர் சென்றது இதற்கு காரணம் ஆக இருக்க கூடும் என முதற்கட்ட ஆய்வு தெரிவிக்கின்றது.
News