உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதல் இடம்
Views - 37 Likes - 0 Liked
-
மத்திய சுகாதாரம்–குடும்ப நலத்துறை, தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் (நோட்டோ) 8–வது இந்திய உடல் உறுப்பு தான தினம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தமிழகம் தொடர்ந்து 3–வது முறையாக உடல் உறுப்பு தானத்தில் முதல் இடம் பெற்றதற்காக விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை மத்திய சுகாதாரத்துறை இணை–மந்திரி அனுபிரியா பட்டேல், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:–
தமிழகத்தில் இதுவரை 1,056 பேரிடம் இருந்து 5 ஆயிரத்து 933 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மூலம் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விஞ்சி நிற்கிறது. வெளிப்படைத்தன்மை, பரவலாக்கம், நடுநிலைப்பங்கு, இடர்களை களைதல், தன்னார்வலர்களின் சேவை மற்றும் அறிவார்ந்த ஊடகம் ஆகியவற்றின் அடிப்படையில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முன்னோடி மாநிலமாக தொடர்ந்து திகழும்.
இவ்வாறு அவர் பேசினார்.News