நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கோரிய வழக்கு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Views - 31 Likes - 0 Liked
-
உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை நீத்தா உபாத்யாய், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் அவர் கூறி இருந்ததாவது:-தற்போதைய கல்வித்திட்டம் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் வகையில் இல்லை. இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைவருக்குமான பொதுவான பாடத்திட்டம், கல்வித்திட்டம் மிகவும் அவசியமானது.ஒவ்வொரு குழந்தையும் எதிர்காலத்தில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த கல்வித்திட்டம் அமைய வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தின் முன்னுரையில் வலியுறுத்தும் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொருவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.பொதுக்கல்வித்திட்டம்ஏழைகளின் குழந்தைகளும் செல்வந்தர்களின் குழந்தைகளும் ஒரே கூரையின் கீழ் சமமாக அமர்ந்து கல்வி கற்கும் வகையில் பொதுக்கல்வித் திட்டம் அமைய வேண்டும். எனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கல்வி வாரியங்களுக்கு பதிலாக நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கு பொதுவான பாடத்திட்டத்தை வடிவமைத்து அமல்படுத்தும் அளவில் தேசிய அளவில் “ஒரே தேசம், ஒரே கல்வி வாரியம்” என்பதை அமல்படுத்த வேண்டும்.இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், கடமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுவான பாடப்புத்தகத்தை நாடு முழுவதும் 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் கற்கும் வகையில் அறிமுகப்படுத்த வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.தள்ளுபடிஇந்த வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கு விசாரணைக்கு தகுதியற்றது. இதுபோன்ற வழக்குகளை கோர்ட்டு ஊக்கப்படுத்தாது” என்று கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.News