" “Not only must we be good, but we must also be good for something.” – Henry David Thoreau"

விளைச்சல்-வரத்து அதிகரிப்பு: தக்காளி விலை கடும் வீழ்ச்சி கிலோ ரூ.10-க்கு விற்பனை

Views - 77     Likes - 0     Liked


  • கடந்த சில வாரங்களாகவே காய்கறி விலை ஓரளவு குறைந்தே காணப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து அதிகரித்து உள்ளதே இதற்கு காரணமாக கூறப்பட்டது. விளைச்சல் எதிர்பார்ப்புக்கு அதிகமாக இருப்பதாலும், தேவைக்கு மிகுதியாக காய்கறி இறக்குமதி செய்யப்படுவதாலும் காய்கறி விலை குறைந்திருக்கிறது. நகரில் உள்ள காய்கறி அங்காடிகள், 2-ம் தர விற்பனை கடைகள் மற்றும் சில்லரை வியாபார கடைகளிலும் காய்கறிகள் விலை குறைந்துள்ளது.
     
    இந்தநிலையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. ஒரு கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை ஆகிறது.
     
    இதுகுறித்து சென்னை கோயம்பேடு (பெரியார் மார்க்கெட்) தக்காளி வியாபாரிகள் சங்கத்தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:-
     
    தக்காளி விலை வீழ்ச்சி
     
    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 40 முதல் 45 லாரிகள் வரை தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ராயக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து விளைவிக்கப்படும் தக்காளி, விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
     
    அதிக விளைச்சல் காரணமாக தற்போது கோயம்பேட்டுக்கு 80 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் தக்காளி விலையில் 2 மடங்கு சரிவு ஏற்பட்டு உள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனை ஆனது. கடந்த வாரம் தக்காளி ரூ.16 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்து கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை ஆகிறது. அதேபோல கர்னூலில் இருந்து கொண்டுவரப்படும் ஆந்திரா தக்காளியும் விலை குறைந்து கிலோ ரூ.15 வரை விற்பனை ஆகிறது.
     
    இவ்வாறு அவர் கூறினார்.
     
    ரூ.20 வரை சரிவு 
    தக்காளியை போல ஏறக்குறைய எல்லா காய்கறி விலையும் குறைந்துள்ளது எனவும், ரூ.5 முதல் ரூ.20 வரை விலை சரிந்து உள்ளது எனவும் சென்னை கோயம்பேடு காய்-கனி-மலர் வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் பி.சுகுமார் கூறியுள்ளார்.
     
    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:- (அடைப்புக்குறிக்குள் உள்ளது கடந்த வார விலை)
     
    விலை நிலவரம்
     
    பல்லாரி- ரூ.40 (45), உருளைக்கிழங்கு- ரூ.12 முதல் ரூ.15 வரை (18), கேரட்- ரூ.40 முதல் ரூ.45 வரை (45-60), பீன்ஸ்- ரூ.20 முதல் ரூ.25 வரை (30-40), நூக்கல்- ரூ.10 முதல் ரூ.15 வரை (15-20), சவ்சவ்- ரூ.10 முதல் ரூ.15 வரை (15-20), பீட்ரூட்- ரூ.15 முதல் ரூ.20 வரை (25), முட்டைக்கோஸ்- ரூ.10 முதல் ரூ.15 வரை (20), மிளகாய்- ரூ.15 முதல் ரூ.20 வரை (25), இஞ்சி- ரூ.25 வரை (35), சேனைக்கிழங்கு- ரூ.20 (மாற்றம் இல்லை), சேப்பங்கிழங்கு- ரூ.20 (மாற்றம் இல்லை), கத்திரிக்காய்- ரூ.10 முதல் ரூ.15 வரை (15-20), வெண்டைக்காய்- ரூ.15 வரை (20), அவரைக்காய்- ரூ.20 முதல் ரூ.30 வரை (40), கோவைக்காய்- ரூ.15 வரை (மாற்றம் இல்லை), கொத்தவரங்காய்- ரூ.20 வரை (மாற்றம் இல்லை), பாகற்காய்(பன்னீர்)- ரூ.25 (30), பெரிய பாகற்காய்- ரூ.20 (25), முருங்கைக்காய்- ரூ.80 முதல் ரூ.100 வரை (100-120), முள்ளங்கி- ரூ.10 (15), வெள்ளரிக்காய்- ரூ.10 (15), புடலங்காய்- ரூ.15 (25), தக்காளி- ரூ.10 வரை (15-25), காலிபிளவர்(ஒன்று)- ரூ.20 வரை (மாற்றம் இல்லை), பீர்க்கங்காய்- ரூ.20 (மாற்றம் இல்லை), சுரைக்காய்- ரூ.10 (மாற்றம் இல்லை), சாம்பார் வெங்காயம்- ரூ.60 (80), தேங்காய்- ரூ.30 வரை (மாற்றம் இல்லை), வாழைக்காய்- ரூ.5 முதல் 7 வரை (மாற்றம் இல்லை). 
    News