மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்தது 4 பேர் படுகாயம்
Views - 29 Likes - 0 Liked
-
திருவண்ணாமலையை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24). கார் டிரைவர். இவருடைய நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (26), தினேஷ் (26).
இவர்களுடைய மற்றொரு நண்பரான ஜீவா (27) ராஜஸ்தானில் இருந்து ரெயிலில் சென்னை சென்டரல் ரெயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்தார்.
இவரை அழைத்து செல்வதற்காக கார்த்திக், நாகராஜ், தினேஷ் ஆகிய 3 பேரும் காரில் சென்னை வந்தனர்.
30 அடி கீழே...
பின்னர் அவர்கள் 4 பேரும் சென்னை சென்டரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு காரில் புறப்பட்டனர்.
நேற்று அதிகாலை 2.30 மணிக்கு தாம்பரம்–மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தாம்பரம் இரும்புலியூர் அருகே உள்ள மேம்பாலத்தின் வளைவில் கார் அதிவேகத்தில் திரும்பியது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு 30 அடி கீழே செல்லும் சாலையில் விழுந்தது. இதில் கார் நொறுங்கியது.
காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்து, காரில் இருந்த வெளியேற முடியாமல் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் 4 பேரும் வலியால் அலறி துடித்தனர்.
அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் அவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News