150 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அபூர்வ சந்திரகிரகணத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்
Views - 46 Likes - 0 Liked
-
வானில் அவ்வப்போது ஏற்படும் அபூர்வ நிகழ்வுகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் (பிர்லா கோளரங்கம்) தொலைநோக்கி கருவிகள் அமைக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.அந்த வகையில் இன்று (புதன்கிழமை) மாலை வானில் அபூர்வ சந்திரகிரகணம் ஏற்படுகிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் இவை 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை சந்திரகிரகணம் என்கின்றனர். இதனை பார்வையிடுவதற்காக, பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.5 தொலைநோக்கிகள்இதுகுறித்து பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியதாவது:-வானில் அபூர்வ நிகழ்வாக வரும் சந்திரகிரகணத்தை மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ள பொதுமக்கள் பார்வையிடுவதற்காக பிர்லா கோளரங்கத்தில் 5 தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு சந்திரகிரகணம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். இதனை வெறும் கண்ணாலும் பார்க்கலாம்.இதற்கு முன்பு 1866-ம் ஆண்டு ஏற்பட்டதற்கு பிறகு தற்போது 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திரகிரகணம் ஏற்படுகிறது. ‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படும் இந்த சந்திரகிரகணத்தை அபூர்வ நிகழ்வாக கருதுகிறோம்.இந்த நிகழ்வு மாலை 5.48 மணிக்கு தொடங்கினாலும் சந்திரன் உதிப்பது மாலை 6.04 மணி என்பதால் அதற்கு பிறகு தான் முழுமையாக தெரியும். இரவு 8.20 மணி வரை வானில் தோன்றுகிறது. இது போன்ற அபூர்வ சந்திரகிரகணம் அடுத்து 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வர இருப்பது குறிப்பிடத்தக்கது.News