3 அரசு பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; போக்குவரத்து பாதிப்பு
Views - 47 Likes - 0 Liked
-
சுசீந்திரம் ஆணைப்பாலம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் ஒரு அரசு பஸ் பயணிகளை இறக்கி கொண்டிருந்தது. பயணிகளை இறக்கிய பிறகு அந்த பஸ்சை டிரைவர் மீண்டும் ஓட்டிச் சென் றார். சிறிது தூரம் சென்றபோது, பஸ்சின் குறுக்கே ஒரு வாகனம் திடீரென கடந்து சென்றது. இதனால் டிரைவர், பஸ்சை பிரேக் போட்டு நிறுத்தினார்.
அப்போது, பின்னால் வந்த வடசேரியில் இருந்து கோட்டையடியை நோக்கி செல்லும் ஒரு அரசு பஸ், அந்த பஸ் மீது மோதியது. அதன் பின்னால் வந்த மற்றொரு அரசு பஸ், கோட்டையடி செல்லும் பஸ் மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 அரசு பஸ்களால் பயணிகள் அலறினர்.
இந்த விபத்தில் கோட்டார் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த சுசீலா என்ற பயணி படுகாயம் அடைந்தார். மேலும், பலர் பஸ்சின் இருக்கையில் இருந்து கீழே விழுந்தனர். இந்த திடீர் விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர்படுத்தினார்கள்.News