பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Views - 29 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அம்பேத்கர் சிலை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சிறுபான்மையினர் அணி மாநில துணை செயலாளர் முகமது யாசீன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் தினகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். முகமது ஜவாஹிர், பேரின்பதாஸ், அன்பழகன், மணி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தின் போது தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சிலர் மாட்டு வண்டியில் ஏறி நின்று பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த மாட்டு வண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் அங்குமிங்குமாக வலம் வந்தது. பஸ் கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்கள் இனி மாட்டு வண்டியில் தான் செல்ல வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இது நடத்தப்பட்டது.News