தமிழக மாற்றத்துக்கு காஷ் ஐடியா உதவும்: நடிகர் கமல்ஹாசன்
Views - 32 Likes - 0 Liked
-
நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பிசினஸ் பள்ளி ஏற்பாடு செய்திருந்த இந்திய கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து வணக்கம் என்று தமிழில் பேச்சை தொடங்கினார்.அவர் பேசும்பொழுது, தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை மோசமாக இருக்கிறது. திட்டங்களை செயல்படுத்துவதில் குறைகள் உள்ளன. இதனால் நிதி சுமை ஏற்படுகிறது என கூறினார். தனது உரையை நாளை நமதே என்று கூறி நிறைவு செய்தார். புதிய இணையதளம் ஒன்றையும் நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி உள்ளார்.அதில் தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இணையும் வகையில் பல்வேறு துறைகளும் சேர்க்கப்பட்டு இருந்தன.இந்நிலையில், தமிழகத்தின் மாற்றத்திற்கு பேராசிரியர் காஷ் என்கிற கஸ்தூரிரங்கனின் ஐடியாக்கள் உதவும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.அவர், பாஸ்டனில் நடந்த சந்திப்பில் புதிய யோசனைகளை தந்ததற்கு நன்றி. தமிழகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்த தங்களின் யோசனைகளும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.News