நாகர்கோவிலில் சாக்லேட் மொத்த விற்பனை நிறுவனத்தில் வருமானவரி சோதனை
Views - 51 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவில் கோட்டார் பகுதியில் பீடி, சிகரெட், சாக்லெட், மிட்டாய் உள்ளிட்டவற்றை மொத்த விற்பனை செய்யும் ஏஜென்சி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே அந்த நிறுவனத்தின் குடோன் மற்றும் அலுவலகம் ஆகியவையும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தினர் முறையாக வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து நாகர்கோவில் வருமான வரித்துறை இணை ஆணையர் ஜெயராம் தலைமையில் அதிகாரிகள் வேணுகுமார், செல்வராஜ், ஸ்டாலின்பீட்டர், மாதுரி உள்ளிட்ட 20 பேர் நேற்று காலை 9 மணி அளவில் கோட்டாரில் உள்ள மொத்த விற்பனை ஏஜென்சி நிறுவனம், அதன் அலுவலகம், குடோன் ஆகிய 3 இடங்களுக்கு திடீரென சென்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். இதனால் கோட்டார் பகுதியில் திடீர் பரபரப்பு உருவானது. இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். அந்த நிறுவனத்தின் கணக்குகள், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த நீண்ட நேரம் வரை நீடித்தது.News