பராமரிப்பு பணி சில மின்சார ரெயில் சேவைகளில் 3 நாட்களுக்கு மாற்றம்
Views - 38 Likes - 0 Liked
-
சென்னை,சென்னை கடற்கரை- கொருக்குப்பேட்டை இடையே 3 மற்றும் 4-வது பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (சனிக்கிழமை) சில மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு:-ரெயில்கள் ரத்து*கும்மிடிப்பூண்டி- சென்னை கடற்கரைக்கு இன்றும், நாளையும் இரவு 9.40 மணிக்கு புறப்படும் ரெயில் மாற்றுப்பாதையில் மூர்மார்க்கெட் வரும். வேளச்சேரி-ஆவடிக்கு இன்றும், நாளையும் இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் சென்னை கடற்கரை-ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.* கடற்கரை-அரக்கோணத்துக்கு நாளையும், 31-ந்தேதியும் நள்ளிரவு 1.20 மணிக்கு புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படும். சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு காலை 4.20, சென்னை கடற்கரை-திருவள்ளூருக்கு காலை 5.30, சென்னை கடற்கரை-ஆவடிக்கு காலை 10.30 மணிக்கு செல்லும் ரெயில்கள் நாளையும், நாளை மறுதினமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.பகுதியாக ரத்து* நாளையும், நாளை மறுதினமும் வேளச்சேரி-பொன்னேரிக்கு அதிகாலை 4.45 மணிக்கு செல்லும் ரெயில் கடற்கரை-பொன்னேரி இடையேயும், பொன்னேரி-வேளச்சேரிக்கு காலை 7 மணிக்கு செல்லும் ரெயில் பொன்னேரி-கடற்கரை இடையேயும், வேளச்சேரி-திருவள்ளூருக்கு காலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயில் கடற்கரை-திருவள்ளூர் இடையேயும், ஆவடி-வேளச்சேரிக்கு அதிகாலை 4.10, 4.25, 6.05 மணிக்கு புறப்படும் ரெயில்கள் ஆவடி-கடற்கரை இடையேயும், அரக்கோணம்-வேளச்சேரிக்கு அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரெயில் அரக்கோணம்-சென்னை கடற்கரை இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.* வேளச்சேரி-ஆவடிக்கு காலை 6.05 மணிக்கு புறப்படும் ரெயில் சென்னை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு 15 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு செல்லும். ஆவடி-வேளச்சேரிக்கு காலை 7.10 மணிக்கு புறப்படும் ரெயில் 5 நிமிடம் காலதாமதமாக புறப்படும்.மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.News