நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
Views - 35 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள் உள்பட அனைவருக்கும் விரைவாக நிவாரணம் வழங்க கோரியும், குமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க கோரியும், கோவளம்- மணக்குடி சரக்கு பெட்டக மாற்று முனையத்தை கைவிடக்கோரியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் வாழ்வுரிமைப் போராட்டம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் சுல்பிகர் அலி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் காஜா மைதீன் வரவேற்று பேசினார். துணைத்தலைவர் கலீல் ரகுமான் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் அப்துல் ரசாக், அன்சார், மாகீன், மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, நேசனல் விமன்ஸ் பிரண்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனூபா, ஐக்கிய கிறிஸ்தவ பேரவை உயர்மட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் பொன்னையா, விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் மாவட்ட தலைவர் நபிலா உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி சிறப்புரையாற்றினார். முடிவில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தெகலான் பாகவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
ஒகி புயல் நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.9 ஆயிரத்து 300 கோடி கேட்கப்பட்டது. ஆனால் உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. குமரி மாவட்டம் மிகச்சிறிய மாவட்டம். குமரியில் துறைமுகம் அமைக்க பட்டால் மாவட்டத்தில் உள்ள நன்செய், புன்செய் நிலங்கள் பாதிக்கப்படும். மீன்வளமும் பாதிக்கப்படும்.
தமிழகத்தை பெரிய ராணுவ மையமாக மாற்ற அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். பணியில் இருக்கும் நீதிபதியை அதிகாரியாக நியமித்து பேராசிரியை நிர்மலா விவகாரத்தை விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு தெகலான் பாகவி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.News